வீடு புகுந்து 3½ பவுன் நகை திருட்டு

தஞ்சையில் வீடு புகுந்து 3½ பவுன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-30 20:38 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாரதிநகரை சேர்ந்தவர் நோயல்ஜாவ். இவருடைய மனைவி அந்தோணி லில்லி புஷ்பம் (வயது70). சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்றனர். இந்தநிலையில் இவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் செல்போன் மூலம் ஊட்டிக்கு சென்றிருந்த நோயல்ஜாவிற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது மனைவியுடன் ஊட்டியில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.பீரோவில் இருந்த 3½ பவுன் நகை, 2 கேமரா, தங்க கெடிகாரம், பட்டுப்புடவை ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் அந்தோணிலில்லி புஷ்பம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்