முஸ்குந்தா ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு: வருவாய் துறையினர் விசாரணை

முஸ்குந்தா ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-06-24 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்ம குண்டத்தில் வழியாக முஸ்கந்தா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சில மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்த நிலையில், ஆற்று மணலில் பாதி தெரிந்த நிலையில், அம்மன் கற்சிலை கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அம்மன் சிலையை மீட்டு, சங்கராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா? யாரேனும் திருடி போட்டு சென்றார்களா என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்