முல்லைப்பெரியாற்றில் கிடந்த சாமி சிலை

வீரபாண்டியில் முல்லைப்பெரியாற்றில் கிடந்த சாமி சிலை மீட்கப்பட்டது.

Update: 2023-05-24 20:45 GMT

வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் நேற்று காலை கருப்பசாமி சிலை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கோவில் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிலை கிடந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலையை எடுத்து, முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடிப்பகுதியில் வைத்தனர்.

மேலும் இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், இந்த சிலையை யாரேனும் ஆற்றில் கொண்டு வந்த போட்டார்களா? அல்லது ஆற்றில் அடித்துவரப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்