கோபி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

வெளிநடப்பு

Update: 2022-10-19 20:04 GMT

கோபி நகராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கோபி நகராட்சியில் வார்டு குழுக்கள், பகுதி சபாக்கள் அமைக்கவும் ஒவ்வொரு வார்டு பகுதியையும் 4 பகுதி சபாவாக பிரித்து மறுவரை செய்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நகராட்சி அ.தி.மு.க. உறுப்பினர்கள் 12 பேர் சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்