மின்னல் தாக்கி ஆடுகள் செத்தன

மின்னல் தாக்கி ஆடுகள் செத்தன

Update: 2022-08-30 19:24 GMT

துறையூர், ஆக.31-

துறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியமும் மழை பெய்தது. துறையூர் அருகே சொரத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பிச்சை என்பவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது, மழை பெய்ததால் பிச்சை அருகே உள்ள மின்மோட்டார் அறைக்கு சென்று ஒதுக்கி நின்றிருந்தார். அவரது ஆடுகள் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் ஒதுக்கி நின்றது. இந்த நிலையில் திடீரென்று புளிய மரத்தில் மின்னல் தாக்கியது. அப்போது, அங்கு மழைக்கு ஒதுக்கி நின்று இருந்த ஒரு ஆடு, 2 ஆட்டுக்குட்டிகளையும் மின்னல் தாக்கியது. இதில் அவைகள் சம்பவ இடத்திலேயே செத்தன. இதனிடையே விவசாயி பிச்சை மின்மோட்டார் அறைக்கு சென்று ஒதுக்கி கொண்டதால் அவர் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்