சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

Update: 2022-07-07 14:09 GMT

பொள்ளாச்சி

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆட்டு சந்தை

பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி இன்று ஆட்டு சந்தை நடந்தது. சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதற்கிடையில் வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கேரளாவில் இருந்து அதிகமாக வியாபாரிகள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் சந்தையில் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிமாக ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 800 முதல் 1,000 வரை ஆடுகள் வந்தன. 5 கிலோ முதல் 30 கிலோ வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை ஆனது.

கடந்த மாதம் 30 கிலோ கொண்ட ஆடு அதிகபட்சமாக ரூ.28 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையவில்லை. மேலும் 30 கிலோ கொண்ட ஆடு இன்று ரூ.32 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்