ஆடு திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

Update: 2022-10-09 16:51 GMT


பெதப்பம்பட்டி அருகே குறி சொல்பவர் போல் சென்றுஆடு திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆடு திருட்டு

பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கம்மாவூரைச் சேர்ந்தவர் பூமிபாலன் விவசாயி பூமி பாலன் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். தோட்டத்திற்குச் சென்றவர்கள் சுற்று மற்றும் பார்த்துவிட்டு தோட்டத்தில் யாரும் இல்லை என அறிந்து தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதை அறிந்த பூமிபாலன் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து விரட்டிச்சென்றுள்ளார். இருசக்கர வாகனம் பெதப்பம்பட்டி அருகே செஞ்சேரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தொடர்ந்து சென்றுள்ளார். பெதப்பம்பட்டி நால்ரோடு அருகே நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளை மடக்கிப் பிடித்தனர்.

மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் பின்னால் இருந்த சிறுவனிடம் ஆட்டை கொடுத்து கடத்திச் சென்றதும் தெரியவந்தது. பொதுமக்கள் இருவரையும் பிடித்து குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிடிபட்டவரிடமிருந்து சிறிய ஓலைச்சுவடி, சிறிய சிலைகள் ஆகியவை இருந்தன.

வாலிபர் கைது

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஈரோடு சத்திய மங்கலத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் சந்துரு (வயது 18) என்பது தெரியவந்தது. குறி சொல்பவர்கள் போல் கிராமப்புறங்களுக்கு சென்று பொதுமக்களை ஏமாற்றியதும் தெரிய வந்தது. போலீசார் சந்துருவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்