ஆடுகள் திருடியவர் கைது
ஓசூரில் ஆடுகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:-
ஓசூர் பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 31), மீன் வியாபாரியான இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று, ஓசூர் பஸ்தி முனிதேவி நகரில் உள்ள இவரது நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 5 ஆடுகளை மர்ம நபர் திருடிச் சென்றார். இதுகுறித்து ராஜா ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆடுகளை திருடியது தொடர்பாக ஓசூர் பஸ்தியை சேர்ந்த மெக்கானிக் அமர் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.