ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருடப்பட்டுள்ளது.

Update: 2022-11-17 18:05 GMT

வாங்கல் குப்புச்சிபாளையம், கீழ்சக்கரபாளையத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி கல்யாணி (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 ஆடுகளை வீட்டின் முன்பு கட்டியிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது 2 ஆடுகளும் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின்பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்