மணப்பாறை சந்தையில் ஆடுகளின் விலை அதிகரிப்பு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை சந்தையில் ஆடுகளின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறை சந்தையில் ஆடுகளின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கால்நடை சந்தை
மணப்பாறையில் புகழ் பெற்ற கால்நடை சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சந்தை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளதால் ஆடுகளை வாங்க ஏராளமானோர் வந்து இருந்தனர். ஆனால் ஆடுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
ரூ.60 லட்சத்துக்கு விற்பனை
வழக்கமாக ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனையாகும் ஆடுகள் நேற்று ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. ஆட்டின் விலையை தாண்டி அதன் எடைக்கு தான் விலை என்ற அளவில் கிலோ ரூ.700 முதல் ரூ.1,000 வரை விலை போனது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடுகளை வளர்ப்பதற்காக வாங்க வந்தவர்கள் ஆட்டின் விலையை கேட்டதும் வாங்காமல் சென்றுவிட்டனர். நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தர்.