பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்

Update: 2023-02-01 19:00 GMT


பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இதில் நத்தம், திண்டுக்கல், கொடைரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக அதிக அளவில் பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். இந்த பாதயாத்திரை பக்தர்கள் இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையின் ஓரமாகவும், தனி நடைபாதையிலும் செல்கின்றனர். எனினும் ஒருசிலர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில் பக்தர்களுக்கு இரவில் ஔிரும் குச்சிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் ஒளிரும் பட்டைகள் பக்தர்களின் கைகளில் ஒட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பக்தர்களை எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாக இருக்கும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கி, பாதுகாப்பாக பாதயாத்திரை செல்லும்படி அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்