திண்டுக்கல்லில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள்

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-01-16 18:57 GMT

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தினமும் ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதையடுத்து இரவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கும் நிகழ்ச்சி, திண்டுக்கல்லில் பழனி சாலையில் நடைபெற்றது.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கி, பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கினார். மேலும் இரவில் பாதயாத்திரை செல்லும் போது சாலையின் அருகே அமைந்துள்ள தனி பாதையில் செல்ல வேண்டும். நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்