கண்ணாடி கடை ஊழியர் தீக்குளித்து தற்கொலை

கண்ணாடி க டை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-08 20:34 GMT

சேலம் அஸ்தம்பட்டி வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 36). சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த மோகனசுந்தரம், தன்னுடைய தாய்மாமா ரகுநாதன் பராமரிப்பில் வளர்ந்தார். திருமணமாகாத மோகனசுந்தரம் கோவையில் உள்ள ஒரு கண்ணாடி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர், சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக ஊருக்கு வந்தார். நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் மோகனசுந்தரம் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்