விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த கண்ணாடி மணிகள்
விஜயகரிசல் குளம் அகழாய்வில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் 2-ம் கட்ட அகழாய்வில் 9-வது குழி தோண்டப்பட்டது. ஏற்கனவே பெண்கள், சிறுவர்கள், விளையாட பயன்படுத்திய சில்லுவட்டு, சுடுமண்ணால் செய்யப்பட்ட கிண்ணம், தங்க அணிகலன்கள், காதணி, தொங்கட்டான், யானை தந்ததால் செய்யப்பட்ட தாயகட்டைகள் உள்பட பண்டைய கால பொருட்கள் கிடைத்தன. இந்தநிலையில் சங்கு வளையல்கள் செய்ய பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை பார்க்கும் போது சங்கு வளையல்களை குறைந்த செலவில் கைத்தொழில் போல் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. மேலும் கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. பல வண்ணத்தில் ஆன கண்ணாடி மணிகளை ஆபரணங்களாக. பயன்படுத்தி உள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஏராளமான மண்பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. இதுவரை 2-வது அகழாய்வில் 2,200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.