ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா

தூத்துக்குடியில் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-20 16:43 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்ட மூப்பனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியும் ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் ராஜகோபாலன், வட்டார தலைவர் சிவக்குமார், துறைமுக சபை தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்