சிலை திருட்டு வழக்கில் தலைமறைவான மன்னார்குடியை சேர்ந்தவர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள மன்னார்குடியை சேர்ந்தவர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்;
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள மன்னார்குடியை சேர்ந்தவர் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிலை திருட்டு
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தனராஜ் முதலியார் தெருவை சேர்ந்த ராமையன் என்பவரின் மகன் முருகேசன் (எ) மாஸ்டர் முருகேசன். இவர் சிலை திருட்டில் ஈடுபட்டு அம்மாப்பேட்டை காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
தகவல் தெரிவிக்கலாம்
இவரை பற்றி தகவல் தெரிந்தால் திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திராவை செல்போன் எண் 709227 7707 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.இந்த தகவலை திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.