பெண்கள் விளையாட பயன்படுத்திய பழங்கால சில்லு வட்டு கண்டெடுப்பு
அகழ்வாயில் பெண்கள் விளையாட பயன்படுத்திய பழங்கால சில்லு வட்டு கண்டெடுக்கப்பட்டது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பழங்கால பொருட்கள் ஏராளமாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், 6-வதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில், பழங்காலத்தில் பெண்கள் விளையாட்டுக்கு பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன சில்லு வட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட அகழாய்வில், சிறுவர்கள், சிறுமியர் பயன்படுத்திய சில்லு வட்டுகள் கிடைத்தன. தற்போது பெண்களுக்கான சில்லு வட்டு கிடைத்து இருக்கிறது, என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.