அரசு விடுதிகளில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- விதிமுறைகள் அறிவிப்பு

Update: 2022-08-31 21:19 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதியில் காலியாக உள்ள இடங்களில் கல்லூரி மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.

அம்பை, நல்லம்மாள்புரம், பாளையங்கோட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகள், கூட்டப்புளியில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு பள்ளி மாணவிகள் விடுதி ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவிகள் தகுதி உடையவர்கள். இந்த விடுதிகளில் விகிதாசார அடிப்படையில் மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்த விடுதிகளில் சேர்வதற்கு மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் அரசின் இந்த சலுகையை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்