சிறுமி கர்ப்பம்; போக்சோவில் வாலிபர் கைது
மேலூர் அருகே சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது தொடர்பாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேலூர்,
மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அப்போது டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்த மேலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய கொட்டாம்பட்டி பகுதியை சேர்ந்த காட்டுராஜா (வயது 30) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.