ஒடுகத்தூர் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சுகந்தி (வயது 23). இவர்களுக்கு ஜஷ்வினி (5) என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டிற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகந்தி சாமரிஷி குப்பத்திலுள்ள தனது தாய் வீட்டில் தங்கி ஆம்பூரிலுள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதியன்று சுகந்தி, பள்ளிக்கு சென்றுள்ள தனது மகள் ஜஷ்வினியை அழைத்து வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் சுகந்தியின் தாயார் செல்லக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.