மின்னல் தாக்கி இளம்பெண் பலி

மின்னல் தாக்கி இளம்பெண் பலியானார்.

Update: 2022-08-30 18:33 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள சாமிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி முத்துமீனா (வயது 22). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வீட்டுக்கு அருகே உள்ள புளிய மரத்தில் கட்டி இருந்த ஆடுகளை அவிழ்ப்பதற்காக முத்துமீனா சென்றார். அந்ரேம் மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்