பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
பந்தலூர்
பந்தலூர் அருகே குந்தலாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி விஜயநிர்மலா. கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று நெலாக்கோட்டை அருகே தனியார்தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக புறப்பட்டார். தோட்டம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானை திடீரென விஜயநிர்மலாவை தாக்கியது. அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் கூச்சலிட்டனர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த விஜயநிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.