வேப்பூர் அருகேவீட்டில் தனியாக இருந்த பெண் திடீர் சாவுநகைக்காக கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

வேப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் திடீரென உயிரிழந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-12-26 19:44 GMT

வேப்பூர், 

வீட்டில் பெண் சாவு

வேப்பூர் அடுத்த சிறுகரம்பலூர் ராஜவீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி தையல்நாயகி (வயது 67). மாணிக்கம் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தையல்நாயகி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்று வந்த, தையல் நாயகி, இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். நேற்று காலை 7 மணிக்கு எதிர் வீட்டை சேர்ந்த ராமதாஸ் மனைவி நீலாதேவி (வயது 57), என்பவர் தையல் நாயகியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டு கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது.

இதையடுத்து, நீலாவதி, அவரது தம்பி பெரியசாமி என்பவரை அழைத்து சென்று பார்த்த போது தையல்நாயகிமூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்ததை பார்த்தனர்.

கொலையா?

உடன் இதுபற்றி, வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மூதாட்டி எவ்வாறு இறந்தார்? அவரது வீட்டில் நகை ஏதும் வைத்திருந்தாரா?, நகையை அபகரிக்க வேண்டும் எண்ணத்தில் யாரேனும் கொலை செய்து சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்