பெண் மர்ம சாவு

திருச்சுழி அருகே பெண் மா்மமான முறையில் இறந்தார்.

Update: 2023-01-16 19:47 GMT

திருச்சுழி

திருச்சுழி அருகே வடபாலையை சேர்ந்தவர் அழகு மகன் கணேசன் (வயது45). இவரது தங்கை சுகன்யாவுக்கும் (33), அதே பகுதியை சேர்ந்த முருகனுக்கும் (35) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் முருகனின் தாயார், சுகன்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக சுகன்யாவின் அண்ணன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணேசன் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது சுகன்யா இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இதுகுறித்து கணேசன் திருச்சுழி போலீசில், சுகன்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்