மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமி சாவு
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமி பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி மேலஅலங்காரத்தட்டை சேர்ந்தவர் கைத்தான் முறாயிஸ். சம்பவத்தன்று இவர் நெல்லையில் இருந்து மனைவி மற்றும் மகள் செராணி (வயது 8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தாராம். அவர்கள் வர்த்தகரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி செராணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.