லாரி மோதி சிறுமி பலி

அம்மூர் அருகே லாரி மோதி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2022-09-01 18:22 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரி.

இவரது மகள் ஷர்மிளா (வயது 4). அங்குள்ள பால்வாடியில் படித்து வந்தாள்.

இன்று மதியம் பால்வாடியில் இருந்து வீட்டுக்கு வருவதற்காக நரசிங்கபுரம் அருகே உள்ள வாலாஜா-சோளிங்கர் சாலையை சர்மிளா கடந்து சென்றாள்.

அப்போது வாலாஜாவில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற லாரி நிலை தடுமாறி ஷர்மிளா மீது மோதியது. இதில் ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்