மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்; வாலிபர் கைது

மார்த்தாண்டம் அருகே மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-03 20:17 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி

மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ஆஷிக் (வயது 20). டிப்ளமோ படித்து வெளிநாட்டில் வேலை செய்த அவர் பிறகு வேலையை விட்டு சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது ஆஷிக்கிற்கும், குழித்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஒரு மாத பழக்கத்தில் இருவரும் நெருங்கி பழகினர். அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்தனர்.

மாயம்

ஒரு கட்டத்தில் மாணவியை சந்தித்த அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவியை 2 நாட்களாக காணவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. பின்னர் பபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மாணவியின் செல்போனும் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கடைசியாக மாணவியின் செல்போன் இயங்கிய இடம் ஆஷிக் வீடு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பலாத்காரம்; வாலிபர் கைது

இதற்கிடையே மாணவி சென்னித்தோட்டம் பகுதியில் நிற்பதை அறிந்த போலீசார் அவரை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய ஆஷிக் தன்னை அவருடைய வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.

அப்போது ஆஷிக்கின் பெற்றோர் வேறொரு அறையில் இருந்தனர். எனினும் அவர்களுக்கு தெரியாமல் என்னை ஏமாற்றி அங்கேயே தங்க வைத்தார். அந்த சமயத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. இதன் பிறகு என்னை சென்னித்தோட்டம் பகுதியில் விட்டு சென்று தலைமறைவாகி விட்டதாக போலீசாரிடம் மாணவி தெரிவித்தார்.

இதனை அறிந்த மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் ஆஷிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னித்தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாணவியை பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்