தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Update: 2022-11-05 18:45 GMT

கூடலூர்

கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மகள் லாவண்யா(வயது 24). கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லாவண்யா யாரிடமும் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த கூடலூர் போலீசார் வரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்