இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-10-12 18:50 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 21). இவர் உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் வீட்டில் பெற்றோர் கவனிக்காத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த பெற்றோர் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து உமாமகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்ததால் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த உமாமகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இது சம்பந்தமாக அவரது தாயார் செல்வி, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்