இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-20 16:53 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமம் காலனியைச் சேர்ந்த மாமுல்ராஜ்- வெள்ளத்தாய் தம்பதியினரின் மகன் அருண்மனோ. லாரி டிரைவரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன்-மஞ்சுளா தம்பதியினரின் மகள் கவிப்பிரியா (21) என்பவரும் கடந்த டிசம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் கவிப்பிரியாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.

மேலும் மஞ்சுளா தனது மகள், மருமகனுக்கு தனது வீட்டின் அருகே தற்போது பணம் இல்லை, விரைவில் வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் வீடு கட்டுவதற்கு கவிப்பிரியா தனது மாமியாரிடம் பணம் கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் ஆத்திரமடைந்த கவிப்பிரியா தனது மாமனார் வீட்டிற்கு சென்று கதவை உட்புறமாக பூட்டி சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

தகவல் அறிந்ததும் ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது, கவிப்பிரியா தூக்கில் பிணமானது தெரியவந்தது.

இதையடுத்து கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவிப்பிரியாவுக்கு திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆவதால் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்