இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-28 19:14 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் ரவி. மில் தொழிலாளியான இவரது மனைவி ஜெபஜெசிந்தா (வயது 33). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக ஜெபஜெசிந்தா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது ஜெபஜெசிந்தா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்