இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-05 19:01 GMT

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை அருகே உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா (வயது 45). இவரது கணவர் இறந்து விட்டார். மகள் ராஜஸ்ரீ(23) பி.காம் படித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தத்தில் ராஜஸ்ரீ இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாயார் அமுதா காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் உள்ள பூஜை அறையில் சேலையால் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடு திரும்பிய தாய் அமுதா, மகள் ராஜஸ்ரீ இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் அங்கு வந்து ராஜஸ்ரீ உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்