புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-07-30 11:05 GMT

திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம்

திருவண்ணாமலை தேனிமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி இந்துமதி (வயது 19).

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2½ மாதங்களாகிறது. இந்துமதி விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த இந்துமதி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த முனியப்பன் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

பின்னர் அவர் இந்துமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இந்துமதிக்கு திருமணமாகி 2½ மாதங்களே ஆவதால் இதுகுறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்