இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-27 20:00 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. அதே பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 21). இவர்கள் இருவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சிைன இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சினேகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் அண்ணன் ரேவேந்திரன் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சினேகாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்