துணி கடைக்கு அழைத்துச் செல்லாததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

அணைக்கட்டு அருகே துணி கடைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றதால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

Update: 2022-09-09 17:34 GMT

அணைக்கட்டு அருகே துணி கடைக்கு அழைத்து செல்லாமல் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றதால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செனறனர்

அணைக்கட்டு அடுத்து முனினாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மஞ்சு. இவர்களது மகள் கீர்த்தி (வயது 11). அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். கீர்த்தியின் பாட்டி வீடு வேலங்காட்டில் உள்ளது. எனவே பொற்கொடி அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக அனைவருக்கும் துணி எடுக்க நேற்று குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலூருக்கு சென்றுள்ளனர்.

அப்போது கீர்த்தியை மட்டும் அழைத்துச் செல்லாமல் வீட்டில் இருக்கும்படி கூறியுள்ளனர். அதற்கு கீர்த்தி தன்னையும் துணிக்கடைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளாள். ஆனால் துணி கடைக்கு வரவேண்டாம் எனக் கூறி கீர்த்தியை வீட்டில் வைத்து பூட்டிக்கொண்டு வேலூருக்கு சென்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

துணி எடுத்துக்கொண்டு மாலையில் வீட்டுக்கு வந்தனர். கதவை திறந்து உள்ளேசென்றபோது பூஜை அறையில் கீர்த்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அலறி அடித்துக் கொண்டு, தூக்கில் தொங்கிய கீர்த்தியை மீட்டு பார்த்தபோது இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்