பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை முயற்சி 3 வாலிபர்கள் கைது

பாலியல் தொல்லையால் சிறுமி விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 3 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-26 18:53 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுமியின் காதலன் ராஜா (வயது 22), மற்றும் சின்ராஜ் (21), பிரசாத் (19) ஆகிய 3 பேரும் சிறுமியை தூக்கிச்சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்ததை பார்த்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

3 வாலிபர்கள் கைது

இதற்கிடையே வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்