சிறுமி தற்கொலை முயற்சி-குழந்தை திருமணம் செய்த தொழிலாளி கைது

குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமி குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை குழந்தை திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-04 21:38 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த சூரியூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் குழந்தை திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நேற்று முன்தினம் சிறுமி வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்