பள்ளி மாணவிகளுக்கு பரிசு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள செக்ககுடி அரசு உதவி பெறும் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 5 பேர் மாநில அளவில் திருச்சியில் திருக்குறள் திருமூலநாதர் அறக்கட்டளை சார்பில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஹர்சினி, அர்ச்சனா, பிரின்சி ஆகிய மூவரும் 1,330 திருக்குறள்களையும் அடிபிறழாமல் ஒப்புவித்து ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பாராட்டு சான்றிதழையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் செல்வராணி, தலைமையாசிரியை ஆரோக்கியமேரி, ஆசிரியர்கள் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சி அளித்த ஆசிரியருக்கும் பாராட்டு, வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.