தூய்மை பணியாளர்களுக்கு பரிசளிப்பு விழா
திருவிடைமருதூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பேரூராட்சி தூய்மையான நகரங்கள் வரிசையில் மாநில அளவில் 2-வது இடத்திலும் தென்னிந்திய அளவில் 15-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு பெருமை சேர்த்த தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் நேற்று திருவிடைமருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன், துணைத் தலைவர் சுந்தர ஜெயபால், செயல் அலுவலர் முத்துக்கண்ணு, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழாவில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.