ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

Update: 2023-01-09 19:00 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு

பாலக்கோட்டில் உள்ள அண்ணா நகர் தக்காளி மண்டி, மேல் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் இதயத்துல்லா, கவுன்சிலர்கள் பிரேமா முரளி, ரவி, மோகன், சரவணன், ஜெயந்தி மோகன், சாதிக்பாஷா, லட்சுமி ராஜசேகர், தி.மு.க. கிளை செயலாளர்கள் ராமமூர்த்தி, கணேசன், சிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாளநத்தம்

கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் கூட்டுறவு ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.வும், தாளநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான வேலுச்சாமி தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

கடத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெப்போலியன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜாமணி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் வீரமணி வரவேற்றார். இதில் பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தசாமி, பா.ம.க. நிர்வாகிகள் லட்சுமணன், துரை, தி.மு.க. நிர்வாகி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கம்பைநல்லூர்

கம்பைநல்லூரில் அமுதம் ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் வடமலை முருகன் தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். தொடர்ந்து 950 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் மாசிலாமணி, பேரூராட்சி துணைத்தலைவர் மதியழகன், கம்பைநல்லூர் நகர செயலாளா் மோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இதில் காங்கிரஸ் நகர செயலாளர் குமரவேல், பேரூராட்சி உறுப்பினர்கள் சாந்தி நடராஜன், சங்கீதா ஜெயக்குமார், நந்தினி திருமால், குமார், விஜயலட்சுமி சுரேஷ், ஆதிமூலம், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சரவணமுத்து, திருமுருகன், ஈஸ்வரன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெதரம்பட்டி

கம்பைநல்லூர் அருகே வெதரம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், கம்பைநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான தனபால் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

தொடர்ந்து ஜக்குபட்டி, கம்பைநல்லூர், சேக்காண்டஅள்ளி, ஆல்ரப்பட்டி, குண்டல்பட்டி, மல்லசமுத்திரம், வெ.புதூர், சின்னமுருகம்பட்டி, தேவரெட்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் மதியழகன், கம்பைநல்லூர் நகர அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அறிவானந்தம், துணைச் செயலாளர் தீனா பாபுமற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாரண்டஅள்ளி, காரிமங்கலம்

மாரண்டஅள்ளி பாலசுப்பிரமணி தெருவில் உள்ள ரேஷன் கடையில் 1,455 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் சத்யா சிவகுமார், அபிராமி, ரீனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காரிமங்கலம் கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவில் நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர். அடிலம், மாட்லாம்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த விழாக்களில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மாதையன், வங்கி தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் சரவணன், கட்சி அவைத் தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜிட்டாண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம், அனுமந்தபுரம், மல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வக்கீல் கோபால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பேசினர். பொம்மைஅள்ளி, திண்டல் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்தகிரி, சங்க தலைவர்கள் ராஜா, சின்னசாமி ஆகியோர் பொங்கல் பரிசை வழங்கினர். இதில் முன்னாள் அவைத் தலைவர் தனக்கோடி, முன்னாள் துணைத் தலைவர் யுவராஜ், நிர்வாகிகள் மாதேஸ்வரன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரூர்

பெரியாம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் பொங்கல் பரிசை வழங்கினார். இதில் துணைத் தலைவர் ஆதிலட்சுமி சம்பத், ஒன்றிய துணை செயலாளர் வடிவேல், பொருளாளர் நல்லதம்பி, வார்டு உறுப்பினர்கள் காளியப்பன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரூர் வர்ணதீர்த்தம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. இதனை பேரூராட்சி தலைவர் இந்திராணி, நகர தி.மு.க. செயலாளர் முல்லை ரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், தி.மு.க. பொது குழு உறுப்பினர்கள் கலைவாணி சரவணன், தயாளன், ரவி, நாகராஜ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்