டாக்டர்கள், சமூக சேவகர்களுக்கு தமிழக அரசு பரிசு
காசநோய் தொற்று குறைந்ததால் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் பரிசு முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார்.
காசநோய் தொற்று குறைந்ததால் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் பரிசு முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார்.
கணக்ெகடுக்கும் பணி
காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காசநோய் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான காசநோய் கணக்கெடுக்கும் பணியை நடத்தி, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் வழி காட்டுதலின்படி, அனைத்து மருத்துவ அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் குறைந்து உள்ளது.
இதனை பாராட்டும் வகையில், சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், சிவகங்கை மாவட்ட காசநோய் பிரிவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
பாராட்டு சான்றிதழ்
இதுபோல் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் ஊட்டச்சத்து உதவி வழங்கி வருகின்றன. இதையொட்டி சிவகங்கை சேவா சமாஜத்தை சேர்ந்த பகீரத நாச்சியப்பன் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த, ஜீவானந்தம் மற்றும் மைக்கேல் தேவசகாயம் அன்னராஜ் (ட்ரூபா) ஆகியோர் களுக்கு அரசின் பாராட்டு சான்றிதழை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். அப்போது துணை இயக்குனர் (காசநோய்) ராஜசேகரன் உடன் இருந்தார்.