ராட்சத கிரேன் வாகனத்தில் தீ

ராட்சத கிரேன் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-05-12 19:50 GMT

உத்தரபிரதேசம் மாநிலம் ஜோகன்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் ராட்சத கிரேன் வாகனத்தை ராமேசுவரத்தில் இருந்து அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைக்கு ஓட்டி வந்தார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி அருகே சுங்க சாவடி வந்ததும், வாகனத்தை நிறுத்தி அங்குள்ள டீக்கடையில் டீக்குடித்தார். அப்போது, திடீரென கிரேன் வாகன என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் சுங்கச்சாவடி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புள்ளம்பாடி மற்றும் டால்மியா தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கிரேன் வாகனம் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்