சுயதொழில் மானியம் பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் செந்தில்ராஜ்
சுயதொழில் மானியம் பெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுய தொழில் தொடங்குபவர்களுக்கு உதவும் வகையில் சுயதொழில் மானியம் வழங்கும் வகையில் தகுதியான திருநங்கைகளிடம் இருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது.
விருப்பம் உள்ளவர்கள் தொழில் குறித்த திட்ட அறிக்கை, தொழில் பயிற்சி பெற்று இருந்தால் அதன் விவரம், தொழில் முன் அனுபவர் குறித்த விவரம், ஆதார் அட்டை, வாரிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு போன்ற சான்றுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.