மரபணு காய்கறி, கிழங்கு கண்காட்சி

வேலூரில் மரபணு காய்கறி, கிழங்கு கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-02-26 17:34 GMT

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மரபு காய்கறி மற்றும் கிழங்கு கண்காட்சி மற்றும் விற்பனை வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர் தலைமை தாங்கினார். பிரதீப் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக சிறைகளில் நன்னடத்தை கைதிகளை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. இதன்மூலம் கைதிகளுக்கு விவசாயம் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்றார்.

அதைத்தொடர்ந்து இயற்கை வேளாண் ஆர்வலர்கள் பலர் இயற்கையான முறையில் விவசாயம் செய்வது பற்றியும், காய்கறிகள், தானியங்களை உட்கொள்வது குறித்து பேசினார்கள். கண்காட்சியில் பல்வேறு அரங்குகளில் ஏராளமான பாரம்பரிய காய்கறிகள், விதைகள், செடி, கொடி, கிழங்குகள், கீரைவகைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு காய்கறிகள், விதைகளை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்