அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நெடியவேல் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தாசில்தார் சரவணன், மாநில பொதுசெயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே தரவேண்டும். கூடுதல் பணி சுமைகளை கொடுக்க்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.