#லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்
சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம்;
அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்
“ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம்” - அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு
“அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன், கழக செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்” - எடப்பாடி பழனிசாமி
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
அந்த தலைவன் வருவான்.. வெளியே வருவான்..வெகு விரைவில் வருவான் - - முன்னாள் அமைச்சர் வளர்மதி
அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்! - கே.பி.முனுசாமி
“பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர்; அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்” என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஒ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார்
ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்