பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. யூனியன் தலைவி சீ.காவேரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் வளன்ராஜா, நாகராஜன், தர்மராஜ், முருகேசன், சுரேஷ்லிகோரி, சரவணன், நான்சி, ஜான்சி, ராதாகுமாரி, ஹேமா, மகேஸ்வரி, ராஜேஸ்வரி, மேரிமாதவன், புவனா, அருமை, கனகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வரையறுக்கப்பட்ட நிதியில் இருந்து குணராமநல்லூர் ராஜீவ்நகரில் ரூ.9.63 லட்சத்திலும், குலசேகரப்பட்டியில் ரூ.7.09 லட்சத்திலும் வாறுகால் அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.