நாலாட்டின்புத்தூர் அருகே மகிழ்வோர் மன்றக் கூட்டம்
நாலாட்டின்புத்தூர் அருகே மகிழ்வோர் மன்றக் கூட்டம் நடந்தது.
கழுகுமலை:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிழ்வோர் மன்றத்தின் 70-வது மாதக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி லெட்சுமி ஆலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். மன்றக் காப்பாளர் மோகன்ராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மன்ற இயக்குநர் ஜான்கணேஷ், மன்ற காப்பாளர் செல்வின், உரத்த சிந்தனை வாசகர் சிவானந்தம் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன், கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் ராஜாமணி, கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.