வில்லுக்குறி அருகே பெட்ரோல் ஊற்றி கார் எரிப்பு வாலிபர் கைது

வில்லுக்குறி அருகே முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி காரை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-28 18:45 GMT

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி காரை தீ வைத்து எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கார் எரிப்பு

வில்லுக்குறி அருகே உள்ள குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 38). இவரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அனீஷ்குமார் (28). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அனீஷ்குமார் மது போதையில் வெங்கடேசுக்கு சொந்தமான கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிது. இதில் காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.

வாலிபர் கைது

இதுபற்றி வெங்கடேஷ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்