வீட்டு வாசலில் வைத்திருந்த கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு

கீழ்வேளூரில் வீட்டு வாசலில் வைத்திருந்த கியாஸ் சிலிண்டர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-27 19:15 GMT

கீழ்வேளூரில் வீட்டு வாசலில் வைத்திருந்த கியாஸ் சிலிண்டர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் சண்முகம். கீழ்வேளூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர்கள் இருவரும் தங்கள் வீட்டு வாசல்களில் காலி கியாஸ் சிலிண்டர்களை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் வீடுகளில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் திடீரென மாயமானது. இதுகுறித்து சண்முகம், ரவி ஆகிய இருவரும் கீழ்வேளூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கியாஸ் சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் அகரகடம்பனூர் ஊராட்சி, ஸ்ரீ கண்டிநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஸ்ரீநாத் (வயது22), கீழ்வேளூர் கே.கே. நகரை சேர்ந்த முருகையன் மகன் மூவேந்திரன் (21) ஆகியோர் என்பதும், சண்முகம், ரவி ஆகியோர் வீட்டு வாசலில் இருந்து 2 கியாஸ் சிலிண்டர்களை திருடியதும் தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட 2 கியாஸ் சிலிண்டர்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்